Tuesday 29 September 2015

வகை (4) முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதைப் போட்டி – 2015



வரலாற்றின் சித்தன்

                        தமிழினைத் தொலைக்க
                        அலையும் தமிழர்கள்!
                        ஒருவன் ஒருத்தி
                        பண்பாட்டைத் தொலைக்க
                        அலையும் இளைஞர்கள்!
                        மனிதத்தைத் தொலைத்து
                        அலையும் மனிதர்கள்!
                        அறத்தொடு வாழ்ந்தது அந்தக்காலம்!
                        அறமெனும் திறத்தை
                        தொலைத்து வாழ்வது இந்தக்காலம்!
                        அனைத்தையும் மற!
                        அறத்தொடு உழைப்பையும் நம்பு!
                        கூகுளுக்குள் ஒன்றைத்
                        தேடிப் பிடித்தால் அது
                        மாணவர்களுக்கு
                        அறிவுப்பிச்சை!
                        கூகுளே
                        தேடிப் பிடித்த
                        மாணவர்
                        சுந்தர் பிச்சை!
                        கடவுளைத் தேடும்
                        பக்தனைக் காட்டிலும்
                        கடவுள் தேடி அலையும்
                        பக்தனே
                        வரலாற்றின் சித்தன்!
ரா.வனிதா,
                                                          தமிழ் - உதவிப் பேராசிரியர்,
                                                                   இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
                                                                   கோவை – 640 028,
 தமிழ்நாடு, இந்தியா,
                                                                   9976674263


வரலாற்றின் சித்தன்  எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.

4 comments:

  1. ““ கூகுளுக்குள் ஒன்றைத்
    தேடிப் பிடித்தால் அது
    மாணவர்களுக்கு
    அறிவுப்பிச்சை!
    கூகுளே
    தேடிப் பிடித்த
    மாணவர்
    சுந்தர் பிச்சை!“““

    இரசித்தேன்.

    போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.

    நன்றி.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள் ...!

      Delete